பகவத் கீதை வெண்பா நீதி கருமத்து நின்மலமா நற்பயனைக் கோதின் முதற்குணத்தே கூறுவரான் – மீதியலுந் துக்க மிடைக்குணத்திற் சூழ்பயனாம் பிற்குணத்திற் றக்க வறிவின்மை தான். 14 . 16 கோது இல் முதல் குணத்தே குற்றமற்ற ஸத்வ குணத்தினாலுண்டாகும், நீதி கருமத்து நல் பயனை பற்றற்ற புண்ய கர்மங்களுடைய பயனை, நின்மலமா கூறுவரால் துன்பம் சிறிதும் அற்றிருக்கை என்று (ஸத்வகுணத்தின் பெருமை அறிந்தவர்கள்) கூறுகிறார்கள்; இடைக்குணத்தில் நடுக்குணமான ரஜோகுணத்தினால், சூழ்பயன் உண்டாகும் பயன், மீது இயலும் துக்கம் ஆ ஸாம்ஸாரிகத் துன்பத்தொடரே என்றும், பின் குணத்தில் கடைசியான தமோ குணத்தினால், சூழ்பயன் உண்டாகும் பயன், தக்க அறிவு இன்மை தான்ஆ நல்ல அறிவு இல்லாமற் போவதேயாம் என்றும் (அந்தந்த குணங்களின் தன்மையறிந்தவர்கள் கூறுகிறார்கள்.) Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0