பகவத் கீதை வெண்பா மேலடைவர் முற்குணத்தோர் மேவு நடுக்குணத்தோர் சாலநடு வாமுலகிற் றானிற்பர் – ஞாலத்துப் பின்னாங் குணத்தியல்வோர் பீடழிவர் கீழ்மையினை யெந்நாளுஞ் சேர விழிந்து. 14 . 18 முற்குணத்தோர் முதலாவதான ஸத்வகுணத்தின் மிகுதியையுடையவர்கள், மேல் அடைவர் காலக்ரமத்தில் (மோக்ஷமாகிற) உயர்நிலைக்குச் செல்கின்றனர்; நடு மேவு குணத்தோர் நடுவிலுள்ள ரஜோகுணத்தின் மிகுதியை உடையவர்கள், நடுவாம் உலகில் தான் சால நிற்பர் (பெரும்பாலும் துன்பத்தைத் தரும்) இடைநிலைப் பிறவிகளிலேயே மிக உழல்கிறார்கள்; பின் ஆம் குணத்து இயல்வோர் கடையான தமோ குணத்தின் மிகுதியை உடையவர்கள், கீழ்மையினை எந்நாளும் சேர இழிந்து மேன்மேலே தாழ்ந்த தமோகுணச் செயல்களிலேயே எப்போதும் ஈடுபட்டவர்களாய், ஞாலத்து பீடு அழிவர் இவ்வுலகில் (மேன்மேலே) அறிவின்மை மிகுந்திருக்கும் கடைநிலைப்பிறவிகளை அடைகிறார்கள். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0