பகவத் கீதை வெண்பா மிக்க குணமவற்றில் வேறுபட்ட கத்தாவைத் தக்க வுணர்வுடையோன் தானுணரான் – றொக்ககுணந் தன்னிற் பரமெனவுந் தன்னறிவான் சேருமே யென்னிற் பரத்தன்மை யேய்ந்து. 14 . 19 தக்க உணர்வுடையோன் ஆத்மாவை நேரே கண்ட ஸத்வநிஷ்டன், மிக்க குணமவற்றில் வேறுபட்ட கத்தாவை தான் உணரான் செயல்புரியும் இயல்வுடைய முக்குணங்களைக்காட்டிலும் வேறுபட்ட தன் ஆத்மாவை செயல் புரிபவனாகக் கருதாதவனாய், தொக்க குணம்தன்னில் பரம் எனவும் செயல் புரியும் குணங்களைக்காட்டிலும் வேறுபட்ட (செயல்புரியாத)வன் என்றும், தன் அறிவான தன் ஆத்மாவைக் கருதுகின்றவன், என்னில் பரத்தன்மை எனது சிறந்த தன்மையை, ஏய்ந்து சேருமே பொருந்தி அடைவான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0