பகவத் கீதை வெண்பா ஆங்கதனா லிப்பதந்தா னாராய்தற் காகுமே வீங்கதனிற் சென்றா ரினிமீளார்- பாங்கதற்குப் பற்றுவா னாகப் பரனையெவ னான்மன்னு முற்றுமியல் வுண்டா முயன்று. 15.4 ஆங்கு விஷயங்களில் பற்றை விட்டபின்பு அதனால் அந்தப்பற்றின்மையை முன்னிட்டுக் கொண்டே இப்பதம் தான் ப்ராப்யமான இந்த ஆத்மாவானது ஆராய்தற்கு ஆகுமே தேடத்தக்கதாகும் ஈங்கு அதனில் சென்றார் இங்கிருந்து சென்று ஆத்மாவை அடைந்தவர்கள் இனி மீளார் ஸம்ஸாரத்திற்கு மறுபடியும் திரும்பிவரமாட்டார்கள் பாங்கு அதற்கு விஷயங்களில் பற்றும் அதற்குக் காரணமான விபரீதஜ்ஞானமும் நீங்குவதற்காக எவனால் எந்தப் பரமாத்மாவால் முயன்று முற்றும் இயல்வு (விஷயங்களில்) ஈடுபடுகைக்கு உறுப்பான அனாதிகாலமாக உள்ளபற்று உண்டாம் உண்டாகிறதோ மன்னு பரனை அனைத்துக்கும் ஆதியான அந்தப்புருஷனை பற்றுவானாக சரணடைவானாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0