பகவத் கீதை வெண்பா

இங்கிதுவே கண்ணாக வேவேற்றுத் தன்னறியா
தங்கியலும் புத்தி யறமறமாய்ப் – பொங்கு
கொடுந்தொழில ராகிக் குலவுலகைத் தீம்பா
லடுந்தொழில ராவா ரவர்.        67.9

அவர்

அந்த ஆஸுரப்ரக்ருதிகள்

இங்கு இதுவே கண்ணாகவே ஏற்று

இவ்வுலகில் இந்த விபரீதமான பார்வையையே பற்றிக் கொண்டு

தன் அறியாது

(தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டதான) தம் ஆத்மாவைக் காணாதவர்களாய்

அங்கு இயலும் புத்தி அற

தேஹத்தில் (ஆத்மாவைப்) பிரித்தறியும் அறிவுஇல்லாமல்

மறமாய் பொங்கு கொடும் தொழிலராகி

அதர்ம வழியில் மிகவும் ஈடுபடும் (பரஹிம்ஸை முதலான) கொடிய செயல்களைச் செய்பவராய்

குலவு உலகை

அழகான உலகத்தை

தீம்பால்

(தம்முடைய) தீய செய்கைகளினால்

அடும் தொழிலர் ஆவார்

அழிக்கும் தொழிலைச் செய்வர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top