பகவத் கீதை வெண்பா

இப்பகைவன் பட்டான்மற் றியாவரையுங் கொல்வேனான்
செப்பமிறை நான்போகி சித்தனான்- மெய்ப்பொருளோன்
மேவுவலி யோன்சுகிநான் மேற்குலநா னாகின்றே
னேவனென்னோ டொப்பான்மற் றிங்கு.          16.14

இப்பகைவன் பட்டான்

இந்தப்பகைவன் (என்வலிமையால்) அழிந்தான்

மற்று யாவரையும் நான் கொல்வேன்

மேலும் பல எதிரிகளையும் (சூரனான) நான் அழித்து விடுவேன்

நான் செப்பம் இறை

நான் இயல்பாகவே அனைவரையும் ஆட்டிவைக்கும் இறைவன்

நான் போகி

நானே (என்திறமையால்) போகங்களை அனுபவிப்பவன்

நான் சித்தன்

நானே (என் திறமையால்) ஸித்திகளைப் பெற்றவன்

(நான்) மெய்ப் பொருளோன்

நானே இயல் பாகவே செல்வங்களைப் பெற்றவன்

(நான்) மேவு வலியோன்

நான் இயற்கையாகவே பலமுள்ளவன்

நான் சுகி

நான் (இயற்கையாகவே) ஸுகமுடையவன்

நான் மேற்குலம் ஆகின்றேன்

நானே (இயல்பாகவே)மேலான குலத்தில் பிறந்திருக்கிறேன்

இங்கு

இவ்வுலகில்

என்னோடு ஒப்பான்

எனக்குச் சமமானவன்

மற்று ஏவன்

வேறு எவன் இருக்கிறான்?

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top