பகவத் கீதை வெண்பா

நானே யெசிப்பேன் கொடுப்பே னனியுகப்பேன்
நானே யெனமோகஞ் சார்ந்தவர்க-ணானாநெஞ்
சோடியே மோகித் துறுங்காமத் தார்நரகிற்
கூடியே வீழ்வர் குலைந்து.        16.15

நானே எசிப்பேன்

நானே (என்திறமையாலே) யாகம் செய்கிறேன்

கொடுப்பேன்

(நானே என் திறமையாலே) தானம் செய்கிறேன்

நானே நனி உகப்பேன்

(நானே என் திறமையாலே புகழ்முதலானவற்றை அடைந்து) மிகவும் இன்புறுகிறேன்

என

என்று

மோகம் சார்ந்தவர்கள்

(ஸர்வேஸ்வரனின் அருளின்றியே தாமே யாகம் தானம் முதலானவற்றைச் செய்கிறோம் என்னும்) அறிவின்மையால் மயங்குகிறவர்களாய்

நானா நெஞ்சு ஓடியே

பல நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறவர்களாய்

மோகித்து

பல மயக்கங்களை அடைந்து

உறும் காமத்தார்

புலனின்பங்களில் மிகவும் ஈடுபட்டவர்களாய்

குலைந்து

(நடுவில்) மரணமடைந்து

நரகில் கூடியே வீழ்வர்

நரகத்தில் (தம்மைச் சேர்ந்தவர்களோடு) கூடியே விழுவர்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top