பகவத் கீதை வெண்பா

தம்மைத்தாஞ் சம்மதிப்பார் தாமுயலார் தம்பித்துச்
செம்மைத் தனமானஞ் சேர்செருக்கா – ரிம்மைக்கே
நாமவினை யால்யசிப்பார் நாட்டியலும் டம்பத்தாற்
சேமவிதி சேராது சென்று.           16.16

தம்மை தாம் சம்மதிப்பார்

தம்மைத்தாமே பெருமை பேசிக்கொள்கிறவர்களாய்

தம்பித்து தாம் முயலார்

பணிவின்றியே ஏதும் செய்யாமல் நிமிர்ந்து நிற்பவர்களாய்

செம்மை தனமானம் சேர் செருக்கார்

மிகுதியான பணத்தாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றாலுண்டான) அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்களான அந்த ஆஸுரர்கள்

நாம வினையால்

புகழையே பயனாகக்கொண்டு செய்யப்படும் யாகங்களாலே

சேம விதி சேராது சென்று

நன்மையைத்தரும் சாஸ்திர விதிக்கு முரணாக நடந்து

நாட்டு இயலும் டம்பத்தால்

யாகம் செய்தவன் என்னும் புகழை உலகில் வெளிப்படுத்திக் கொள்ள உதவும் டம்பத்திற்காக

இம்மைக்கேயசிப்பார்

இவ்வுலகப் பயன்களுக்காகவே யாகம் செய்வார்கள்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top