பகவத் கீதை வெண்பா உற்றவுடற் பூதங்க டன்னை யொறநின்றே மற்றதனுண் மேவுயிராய் மன்னெனையும்- பற்றற் றறவருந்து விப்பரவ ராசுரமாம் புத்தி மறவ றெனநினைநீ மற்று. 17.6 கோரமாய் மிகக்கடுமையாய் சாத்திரத்தில் கூறா சாஸ்திரங்களில் கூறப்பட்டதான தவம் தன்னை தவத்தையும் (யாகத்தையும்) டம்பமுடன் சேரவே டம்பத்துடன் கூடியவர்களாய் ஈரமில்லா ஆங்காரங் கூடி கருணையில்லாத அஹங்காரத்தோடு கூடியவர்களாய் அதிகாம ராகங்கள் தீங்காகும் திண்மை செறிந்து மிகுந்த காம ராகங்களால் தீயதான பலத்தோடு சேர்ந்தவர்களாய் யார் இயல்வார் எவர்கள் செய்கிறார்களோ மற்று அவர் மிகத்தாழ்ந்த அவர்கள் உற்ற உடல் பூதங்கள் தன்னை ஒறாநின்றே (தம் சரீரத்தில்) இருக்கும் ஐந்து பூதங்களையும் வருந்தச் செய்கின்றவர்களாய் மற்று அதற்குமேல் அதனுள் மேவு உயிராய்மன்(னு) எனையும் அந்த சரீரத்தினுள் இருக்கும் உயிராகப் பொருந்தியிருக்கும் என்னையும் பற்று அற்று கருணையில்லாமல் அறவருந்துவிப்பர் மிகவும் வருந்தச்செய்பவர்களாய் ஆசுரமாம் புத்தி மறவர் (எனது ஆணையை மீறுதலாகிற) ஆஸுரமான உறுதியை உடையவர்கள் என என்று நீ நீ நினை நினைப்பாயாக. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0