பகவத் கீதை வெண்பா

நெஞ்சாற் பலத்தை நினையாதெச் சந்தானந்
துஞ்சாத் தவமுத்தி தொன்மைநினைந்- தெஞ்சாம
லொத்தங் கியலு முயர்ந்த தெனச்சொல்லும்
தந்தென் றுரைக்குந் தரம்.         17.26

உயர்ந்தது எனச் சொல்லும்

(பரம்பொருளின் பெயராகையாலே உயர்ந்தது என்று (சாஸ்திரங்கள்) கூறும்

'தத்' என்று உரைக்கும் தரம்

'தத்' என்று சொல்லப்படும் சிறந்த சொல்

நெஞ்சால் பலத்தை நினையாது

மனத்தால் மற்ற பலன்களை நினையாமல்

தொன்மை முத்தி நினைந்து

நித்யமான மோக்ஷத்தையே பலனாகக் கொண்டு

துஞ்சா எச்சம் தானம் தவம்

பலத்தால் அழியாத யாகம் தானம் தவம் ஆகியவற்றோடு

எஞ்சாமல் ஒத்து அங்கு இயலும்

எல்லாக் காலத்திலும் ஒரு படியாகச் சேர்ந்திருக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top