பகவத் கீதை வெண்பா

ஆதலா லோமென் றமர்ந்துரைத்தே யந்தணர்க்கு
வேதநின் றேதும் விதிவகையே – போதமுட
னெச்சந்தா னந்தவங்க ளெல்லாமெக் காலத்து
மிச்சந்தன் னானடக்கு மேல்.          17.25

ஆதலால்

(இப்படி என்னாலேயே) வைதிககர்மங்கள் முதலானவை இந்த மூன்று ஸப்தங்களோடு கூடவே படைக்கப்படுகையால்

வேதம் நின்று ஓதும் அந்தணர்க்கு

வேதத்தை இடைவிடாமல் ஓதும் மூன்று வர்ணத்தவர்களுக்கு

விதிவகையே போதமுடன்

வேதவாக்யங்களில் விதிக்கப்பட்டிருக்கும் அறிவோடு கூடிய

எச்சம் தானம் தவங்கள் எல்லாம்

யாகம் தானம் தவம் முதலான எல்லா வைதிககர்மங்களும்

ஓம் என்று அமர்ந்துரைத்தே

முதலில் 'ஓம் என்று' உச்சரித்தபின்பே

மேல் மிச்சம்

(அவற்றில்) எஞ்சியுள்ள மேல்பகுதிகளோடு

எக்காலத்தும்

எல்லாக்காலத்திலும்

தன்னால் நடக்கும்

தானே அநுஷ்டிக்கப்படும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top