பகவத் கீதை வெண்பா நான்செய்தே னென்று நடக்கு மனமின்றித் தான்சேர் பயனதனிற் சார்வற்றான் – றான்சேரு மிவ்வுலகைக் கொன்று மிவன்கொல்லான் கட்டுண்ணா னவ்வினையிற் சேரா னவன். 18.17 நான் செய்தேன் என்று நடக்கும் மனமின்றி 'இச் செயலை நானேசெய்தேன்' என்று எண்ணும் மனமில்லாமல் தான் சேர் பயன் அதனில் சார்வு அற்றான் அந்தச் செயலுக்கு வரும் பலனில் தன்னுடையது என்னும் பற்று இல் லாமல் இருப்பவன் எவனோ இவன் இப்படிப்பட்டவன் இவ்வுலகை கொன்றும் கொல்லான் [போரில்] இவ்வுலகம் முழுவதையும் கொன்றாலும் கொன்றவனாகமாட்டான் அவன் அவன் அவ்வினையில் சேரான் அச்செயலின் பயனை அடையமாட்டானாகையாலே கட்டுண்ணான் ஸம்ஸாரத்தில் கட்டுப்படமாட்டான். Previous Next