பகவத் கீதை வெண்பா காணுணர்வுங் கன்மமுங் கர்த்தாவு மும் மூன்றாய்ப் பேணுங் குணத்திற் பிரியுமதென – றேணுறவே யக்குணஞ்சேர் தன்மை யறவுரைப்ப ராங்கதனை மிக்குணர்ந்து மன்னாகேள் வேறு. 18.19 காண் உணர்வும் (செய்யவேண்டிய கர்மத்தை) அறியும் ஜ்ஞாநமும் கன்மமும் ( செய்யப்படும்)கர்மமும் கர்த்தாவும் அதைச்செய்பவனும் (ஆகிய இம்மூன்றும்) பேணும் குணத்தில் (அவனவன்) கைக்கொள்ளும் (ஸத்வம் முதலான) குணத்தையொட்டி மும்மூன்றாய் பிரியுமது மூன்று மூன்றாய்ப் பிரிகின்றன என்று என்று அக்குணஞ்சேர் தன்மை (முக்குணங்களில்) அந்தக் குணத்தினால் விளையும் விளைவுகளை ஏணுறவே அற உரைப்பர் (அறிவாளிகள்) சிறப்பாகவும் நன்றாகவும் கூறுவர் மன்னா அரசனான அர்ஜுனா! ஆங்கு அதனை முற்கூறிய மூன்றும் மூன்றுமூன்றாகப் பிரிகின்ற வகையை வேறு தனித்தனியாக மிக்கு உணர்ந்து கேள் மிகவும் கவனமாக (நான் சொல்லக்) கேட்பாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0