பகவத் கீதை வெண்பா புந்தியிலுந் திண்மையிலும் பூணுங் குணப்பிரிவால் வந்திவைதான் மூன்றாம் வகையதனைச் – சிந்தைதிகழ்ந்தெல்லாம் பிரிவறிய யானியம்பக் கேளிதனை நல்லாய் தனஞ்செயனே நன்கு. 18.29 நல்லாய் தனஞ்செயனே நல்லவனான அர்ஜுனா! புந்தியிலும் (ஆராய்ந்து உறுதிகொள்ளுகையாகிற) புத்தியினுடையவும் திண்மையிலும் (தொடங்கிய கர்மத்திற்கு இடையூறு ஏற்பட்டாலும்) தரித்து நிற்கையாகிற த்ருதியினுடையவும் பூணும் குணப்பிரிவால் முக்குணப் பிரிவையிட்டு இவைதான் வந்து மூன்றாம் வகை அதனை ஒவ்வொன்றும் மும்மூன்றாய் இருக்கும் வகையை எல்லாம் பிரிவு அறிய யான் இயம்ப தனித்தனியாக அனைத்தை யும் யான் கூறுவதை இதனைச் சிந்தை திகழ்ந்து நன்கு கேள் இதை நெஞ்சில் கவனமாகக்கொண்டு உள்ளபடி கேள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0