பகவத் கீதை வெண்பா சீரார் வியாதன் றிருவருளான் மிக்குயர்ந்த ஏரார் மறை பொருளா மியோகத்தைப் – பேராண்மைக்கண்ணனவன் றானே கருத்தோ டுரைத்தருள வெண்ணமுடன் கேட்டேனா னிங்கு. 18.75 சீரார் வியாதன் திருவருளால் சிறப்புமிக்க வேத வியாஸருடைய போருளாலே (திவ்யமான கண்ணையும் செவியையும் பெற்று) மிக்கு உயர்ந்த ஏரார் மறை பொருளாம் இயோகத்தை மிகவும் உயர்ந்த சிறந்த ரஹஸ்யப்பொருளான 'யோகம்' எனப்படும் இந்த சாஸ்திரத்தை பேராண்மை கண்ணன் அவன்தானே கருத்தோடு உரைத்தருள ஸர்வேஸ்வரத்வம் முதலான கல்யாணகுணங்களை உடைய கண்ணன் தானே மனமொன்றிக்கூற நான் (ஸஞ்ஜயனாகிற) நான் இங்கு இவ்விடத்தில் எண்ணமுடன் கேட்டேன் பொருளுணர்ந்து கேட்டேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0