பகவத் கீதை

कथं विद्यामहं योगिस्त्वां सदा परिचिन्तयन् |
केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन्मया ॥ १७॥
கதம் வித்யாமஹம் யோகீ த்வாம் ஸதா பரிசிந்தயந் |
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோzஸி பகவந் மயா ||     10.17

க்ருஷ்ண! பக்தி யோகம் செய்யும் நான் உன்னை எந்தெந்த பொருள்களில் எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? எந்தெந்த கலியாண குணங்கள் நிறைந்தவனாய் உன்னை நான் சிந்திக்க வேண்டும்? இவையெல்லாவற்றையும் எனக்கு நீ விரிவாக உப தேசிக்க வேண்டும்.

க்ருஷ்ண! உனது எல்லா நற்குணங்களையும், நியமிக்கும் (ஆளும்) சக்தியையும் மறுபடி நீ எனக்கு விரிவாகச் சொல்ல வேண்டும். உனது அம்ருதமான மொழிகளைக் கேட்பதில் எனக்கு போதும் என்கிற திருப்தி இல்லை.

உலகிலுள்ள விஷயங்கள் எதுவாயினும் அளவுக்கு அதிகமாகும்போது தெவிட்டும் தன்மை உடையவையே. ஆனால் பகவத் விஷயமோ அப்படிக்கில்லை. “நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கப்பொழுது என் ஆரா அமுதமே” என்கிறார் நம்மாழ்வார். அர்ச்சையில் பகவானை நாம் எத்தனை தடவை சேவித்தாலும், அவன் குணங்களையும், சரித்திரங்களையும், செயல்களையும் எத்தனை தடவை கேட்டாலும், அவை தெவிட்டாத அம்ருதமாயிருக்கும். கொள்ளமாளா இன்ப வெள்ளமாயிருக்கும். மேலும் மேலும் கேட்பதில் இச்சையைப் பிறப்பிக்கும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top