கேசவ! நீ எனக்குச் சொன்னதெல்லாம் முற்றிலும் உண்மை என்றே நான் நம்புகிறேன்; உன் அவதாரங்களெல்லாம் உண்மையே. இதை தேவர்களும் அறிவதில்லை.
க்ருஷ்ண! இல்லாதவைகளை தற்புகழ்ச்சியாக நீ எதுவும் சொல்லவில்லை; உனது மேலான ஞான, சக்தி,பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் இவைகளை அறிவில் சிறந்த தேவர்களும் உள்ளபடி அறியமாட்டார்கள்; அப்படி இருக்க அசுரருக்கு எப்படி இவை தெரியப்போகும்.