பகவத் கீதை

दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥ ११॥
திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுவேபநம் |
ஸர்வாச்சர்யமயம் தேவம் அநந்தம் விச்வதோ முகம் ||     11.11

அந்த விசுவரூபம் இருந்தபடி எங்ஙனே எனில்? அவ்வடிவில் அநேக முகங்கள், கண்கள், பல அதிசய காட்சிகள், தெய்வீகமான பல ஆபரணங்களை அணிந்தும், தெய்வீகமான பல ஆயுதங்களை கைகளில் எந்தியுமிருந்தது. அவ்வுருவம்.

மேலும் அவ்வுருவம் திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து, திவ்யமான கந்தம் பூசியதும் பெரும் வியப்பூட்டுவதும், பிரகாசித்தது எங்கும் முகமுடையதாகவுமிருந்தது. முக்காலத்திலும் உள்ளவைகளுக்கெல்லாம் இருப்பிடமாயும், இடம், காலம் இவைகளால் அளவிட முடியாததாயும் தன் ரூபத்திற்குத் தகுந்த ஆபரணங்களையும் மாலைகளையும் அணிந்து ஒளிவிட்டு பிரகாசித் திருந்தது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top