பகவத் கீதை

अमी हि त्वा सुरसङ्घा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति ।
स्‍वस्‍तीत्‍युक्‍त्‍वा महर्षिसिद्धसङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः ॥ २१ ॥
அமீ ஹி த்வா ஸுரஸங்க்கா விசந்தி கேசித் பீதா: ப்ராஞ்ஜலயோ கருணந்தி |
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்க்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: ||     11.21

தேவர்கள் கூட்டம் கூட்டமாய் உம்மிடம் ஆவலுடன் புகுகின்றனர். சிலர் பயந்தவர்களாய் கைகளைக் கூப்பி வணங்கி உம்மை துதி செய்கிறார்கள். சித்தர்களும் ரிஷிகளும் ப்ரீதியினால் உமக்கு மங்களத்தை ஆசாஸிக்கிறார்கள் (பிரார்த்திக்கிறார்கள்).

பகவானுக்குத் தொண்டு செய்வதே ஜீவாத்மாவின் ஸ்வரூபம். அவைகளில் அவனுக்கு மங்களத்தைப் பிரார்த்திப்பதே (பல்லாண்டு பாடுவதே) மேலான தொண்டு. அதையே தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் செய்கிறார்கள், அதில் தேவகணங்கள் பயத்தினால் துதிக்கிறார்கள்: சித்தர்களும், ரிஷிகளுமோவெனில் அன்பினால் அவனுக்கு மங்களத்தை ஆசாஸிக்கிறார்கள். இதுவே சிறந்த பகவத்கைங்கர்யம்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top