பகவத் கீதை

यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति ।
तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्‍वलन्‍ति ॥ २८॥
யதா நதீநாம் பவஹவோம்புவேகா: ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி |
ததா தவாமீ நரலோகவீரா விசந்தி வக்த்ராண்யபி விஜ்வலந்தி ||     11.28

பல நதிகளின் வெள்ளங்கள் எப்படி கடவில் போய் விழுகின்றனவோ, அதே போல் போர் வீரர்களெல்லாம் தழல் வீசும் உன் வாயில் வந்து புகுகிறார்கள். சுடர்விட்டு எரியும் தீயினில் எப்படி வீட்டில் பூச்சிகள் தாங்களே போய் விழுந்து மாய்கின்றனவோ, அது போல் உலகிலுள்ள உயிர்களெல்லாம் உம் வாய்க்குள் நுழைகின்றனர்.

கடலில் விழும் நதிகளின் தண்ணீரின் நாமரூபங்கள் மாறுகிறதே ஒழிய, அந்த நீருக்கு நாசமில்லை; எத்தனை நதிகள் கடலில் விழுந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அதே போல எத்தனை உயிர்கள் அந்த விச்வரூபத்தில் விழுந்தாலும், அவைகள் அழிவதில்லை. நாமரூபங்களே மாறுகின்றன. எத்தனை உயிர்கள் விழுந்தாலும் அந்த விச்வரூபத்தில் சிறிய பாகத்திலேயே அடங்கி விடுகின்றன. நெருப்பு தங்களை பொசுக்கிவிடும் என்பதை அறியாமல் விட்டில் பூச்சிகள் ஆசையுடன் அதில் விழுந்து நாசமடைகின்றன. அது போல் உயிர்களெல்லாம், தங்கள் ஆத்ம நாசத்தை விளைவிக்கும் உலக விஷயங்களை போக்யமாக எண்ணி அவைகளில் அன்பைச் செய்து அதன் வினைப்பயனாக உன் வாயில் வந்து விழுகின்றனர்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top