பகவத் கீதை

यच्‍चापहासार्थमसत्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु ।
एकोऽथवाऽप्यच्युत तत्समक्षं तत्क्षामये त्वामहमप्रमेयम् ॥ ४२॥
யச்சாபஹாஸார்த்தம் அஸத்க்ருதோஸி விஹாரசய்யாஸந போஜநேஷு |
ஏகோ தவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத் க்ஷாமயே த்வாமஹம் அப்ரமேயம் ||     11.42

உலகமனைத்தும் படைத்து ஆளும் உம் மேன்மையையும் எல்லாவற்றிலும் ஆத்மாவாகயிருந்து அவைகளை தரித்து நியமிக்கும் உம்முடைய வீர்ய, சௌர்ய, பராக்ரமத்தையும், இவை ஒன்றையும் நான் அறியாமல், வெகு காலம் உம்முடன் தோழனாகப் பழகினதினால், அன்பினால் உம்மை நான் 'ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, ஏ தோழனே' என்று, கூவி உன்னை சாதாரண மனிதன் என்றே எண்ணி, பெரிய தப்பைச் செய்து விட்டேன். அச்சுதா! இன்னும் உன்னுடன் விளையாடின பொழுதும், உணவருந்துகையிலும், படுத்திருந்த பொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், தனித்தோ பிறர் முன்போ உம்மை நான் ஏளனம் செய்து அவமதித்திருக்கிறேன்; நான் செய்த அப்பிழைகளை யெல்லாம் நினைத்து இப்போது நடுங்குகிறேன். ப்ரஹ்மா முதலானோர் உம்மிடம் படும் பாட்டைக் கண்டால், நான் எம்மாத்திரம்! இப்படி நான் அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் மன்னித்தருள வேண்டுகிறேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top