பகவத் கீதை

पिताऽसि लोकस्य चराचरस्‍य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
न त्वत्समोस्‍त्‍यभ्यधिकः कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव !॥ ४३॥
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யச்ச குருர்கரீயாந் |
ந த்வத்ஸமோஸ்த்யப்பதிக: குதோந்யோ லோகத்ரயேப்யப்ரதிமப்ரபாவ ||     11.43

ஒப்புயர்வற்ற அறப்பெரியோனே ! இவ்வுலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் அறிவில்லா அசேதனங்களுக்கும் நீரே தந்தையும் தாயுமாகிறீர். (படைத்தலுக்கு எல்லாவித காரணமும் பகவானே யாதலால் அவனே உலகுக்கெல்லாம் தந்தையும் தாயுமாகிறான்). போற்றுதற்குரிய குருவும் ஆசார்யனும் நீரே. (ஸ்ரீவைஷ்ணவ மதத்தில் ப்ரதமாச்சார்யன் லக்ஷ்மிநாதன்), மூவுலகி லும் வேறானவன் உமக்கு ஈடில்லை. அப்படியிருக்க மேலானவன் எவனும் இருக்கமாட்டானன்றோ!

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top