பகவத் கீதை

तस्मात्प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यम् ।
पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायार्हसि देव सोढुम् ॥ ४४॥
தஸ்மாத் ப்ரணம்ய ப்ராணிதாய காயம் ப்ரஸாதயே த்வாம் அஹம் ஈசம் ஈட்யம் |
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் ||     11.44

ஆதலால், நான் என் உடலில் கீழே விழுந்து உம்மை வணங்கி, போற்றத்தக்க ஈச்வரனாகிய உம் அருளை வேண்டுகிறேன். மகனுக்குத் தந்தை போலும், தோழனுக்குத் தோழன் போலும், உமக்கு ப்ரியமான என்னுடைய பிழைகளை எல்லாம், எனக்குப் பிரியமான நீர் பொறுத்தருளக் கடவீர்.

தான் பெற்றெடுத்த மகனின் குற்றத்தை தந்தை பொறுப்பது இயல்பு. அதே போல ஒரு தோழன் செய்த பிழையை ஒருவன் பாராமல் அவனுக்கு நன்மையே செய்வான்.

"பிரியோஹி ஞானி அத்யர்த்தம், அஹம்ஸசமமப் பிரிய: என்று கண்ணன் கூறியுள்ளது போல, ஒருவருக்கொருவர் பிரியமானவர்களாயிருப்பதால், தான் செய்த பிழைகளை பொறுத்தருள கடமைப்பட்டவர் என்பதைச் சொல்லி அவனை தெண்டன் சமர்ப்பித்து வேண்டிக் கொள்கிறான் அர்ஜூனன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top