பகவத் கீதை

न तु मां शक्ष्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥ ८॥
ந து மாம் சயஸே த்ரஷ்டும் அநேநைவ ஸ்வசக்ஷுஷா |
திவ்யம் ததாமி தே சக்ஷு: பச்ய மே யோகமைச்வரம் ||     11.8

ஆனால் அர்ஜுன! உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண இயலாது; உனக்கு தெய்வீகத் தன்மையான கண்ணைக் கொடுக்கிறேன்; அதைக் கொண்டு எனது ஆளும் வைபவத்தைப் பார்.

பிரக்ருதியினாலான கண்ணைக்கொண்டு ப்ரக்ருதிப் பொருளைத் தான் காணமுடியும்; அதுவும் தூரத்திலிருக்கும் பொருளைக் காண தூரத்ருஷ்டிக் கண்ணாடி வேண்டும். பூதக்கண்ணாடியைக் கொண்டே நுண்ணிய பொருளைப் பார்க்க முடியும். அதே போல அப்ராக்ருதமான பகவத் ரூபத்தைக்க் காண தெய்வீகமான, ஞானக்கண் வேண்டும்; அதுவும் பகவானுடைய இன்னருளாலேயே கிடைக்கும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top