எனக்குத் தேஜோமயமாய் எங்கும் பிரகாசித்துக் கொண்டு காணக் கண் கூசி கொழுந்து விட்டெரியும் தீபம் போலவும், சூரிய ஒளி போலவும் அளப்பரியவராய் உள்ள உம்மை, கிரீடம், கதை, சக்ராயுதம் உடையவராய் எங்கும் காண்கிறேன் நான்.
கிரீடம், சங்கம், சக்ரம், கதை இவைகளைத் தரித்திருப்பதைக் கொண்டு இவனே பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணன் (மஹாவிஷ்ணு) என்பதை அர்ஜுனன் நேருக்கு நேர் கண்டு அறிந்தான்.