பகவத் கீதை

लेलिह्यसे ग्रसमानः समन्तात् लोकान्समग्रान्‍वदनैज्‍र्वलद्भि: ।
तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्राः प्रतपन्ति विष्णो ॥ ३०॥
லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தாத் லோகாந் ஸமக்ராந் வதநைர் ஜ்வலத்பி |
தேஜோபிராபூர்ய ஜகத் ஸமஸ்தம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ ||     11.30

உன் வாய்களினால் உலகம் அனைத்தையும் விழுங்கிக் கொண்டும், இரத்தத்தை நாவினால் நக்கிக் கொண்டும், நீர் காணப் படுகிறீர். உம் கடுமையான கிரணங்கள் உலகம் அனைத்தும் பரவி எரிக்கின்றன.

பக்கம்-90-பகவத் கீதை

ஸர்வேச்வரன் உலகைப் படைப்பானேன்? உலகத்தவர் தாங்களே அவன் வாயில் போய் விழுந்து நாசமடைய, அவர்களை பகவான் அழித்தான் என்பது எப்படிக் கூடும்?

அநாதி காலம் தாங்கள் செய்த புண்ய பாப கர்மம் அடியாக மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அவதிப்படும் ஜீவாத்மாக்கள், தன்னை அறிந்து தன்னிடம் பக்தி செய்து ஆத்ம ச்ரேயஸ் பெறுவதற்காகவே, தன் க்ருபையினால் பகவான் அவைகளை அடிக்கடி படைக்கிறான். ஆனால் அவர்கள் அவனை அறிவதில்லை; உலக விஷயங்களிலேயே மண்டி அல்லல் படுகிறார்கள். இதைக் கண்ட பகவான் அவர்களை அழிக்கிறான். பூச்சியினால் அரிக்கப்பட்டுக் கெட்டுப்போன பயிரை ஓர் விவசாயி அதை அழித்து மறுபடியும் பயிரிடுவது போல பகவானும் அவர்களை அழித்து மறுபடியும் படைக்கிறான்; பகவான் ஒரு க்ரிஷகன். பக்திஉழவன்.

அவர்களே வந்து அவன் வாயில் விழுந்து நாசமடைந்தாலும், அது அவன் சங்கல்பத்தினாலேயே (நினைவு மாத்திரத்தினாலேயே) நடைபெறுகிறபடியால், பகவானே உலகை அழிக்கிறான் என்பது தேறும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top