பகவத் கீதை

आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद ।
विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् ॥ ३१॥

ஆக்யாஹி மே கோ பவாந் உக்ரரூபோ நமோஸ்து தே தேவவர ப்ரஸீத |
விஜ்ஞாதும் இச்சாமி பவந்தம் ஆத்யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம் ||     11.31

தேவ தேவச! இவ்வளவு பயங்கர உருவமான நீர் யார்? என்பதை எனக்குக் கூறும். உம்மை வணங்குகிறேன். அருள் புரிக. முதல்வனான அதாவது ஆதிபுருஷனான உம்மை, அறிய விரும்புகிறேன். ஏனெனில் உம்முடைய செயல் எனக்கு விளங்கவில்லை.

பயங்கர உருவுடனுள்ள நீர் யார்? இப்போது என்ன செய்ய விரும்புகிறீர்? என்பதை எனக்கு அருளிச் செய்ய வேண்டுமென அர்ஜுனன் பிரார்த்திக்கிறான்.

அர்ஜுனன் கேட்டுக் கொண்டபடி கண்ணன் தன் விச்வரூபத்தைக் காட்டினான்; ஆதலால் அந்த கிருஷ்ண பரமாத்மாவே இந்த ரூபத்தை எடுத்திருக்கிறான் என்பது அர்ஜுனனுக்குத் தெரியும். இருந்தாலும் இப்படி பயங்கர வடிவத்தை நீர் ஏன் எடுத்திருக்கிறீர்? இதனால் நீர் செய்ய நினைத்திருப்பது யாது? என்பதை எனக்கு அருள வேண்டும் என்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top