பகவத் கீதை

श्रीभगवानुवाच कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो लोकान् समाहरर्तुमिह प्रवृतः। ऋतेपि त्वा न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः ॥ ३२॥
பகவான் உவாச: கண்ணன் கூறியது.
காலோஸ்மி லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்த: லோகாந் ஸமாஹர்த்தும் இஹ ப்ரவருத்த: |
ரிதேபி த்வா ந பவிஷ்யந்தி ஸர்வே யேவஸ்த்திதா: ப்ரத்யநீகேஷு யோதா: ||     11.32

உலகங்களை அழிக்கும் வல்லமையுடைய காலமாக நானிருக்கிறேன். இப்போது உலகங்களை அழிக்கத் தலைப்பட்டிருக்கிறேன். நீ போர் செய்யாவிடினும், உன் எதிரில் அணிவகுத்து நிற்கும் போர் வீரர்கள் எல்லோரும் இனி உயிர் வாழமாட்டார்கள்.

'நீ யார்," என்று அர்ஜூனன் கேட்டதற்கு, "அநாதி:கால: பகவான்'' என்கிறபடி "நான் வல்லமையுள்ள அநாதியான காலம்" என்கிறான். எல்லோருடைய ஆயுள் காலத்தையும் நான் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன். துரியோதனாதிகளின் ஆயுள் காலம் முடிவடைந்தது.

"நீ என் செய்ய நினைத்திருக்கிறாய்?" என்ற அர்ஜுனன் கேள்விக்கு, அந்த துரியோனாதிகளையும் மற்ற போர்வீரர்களையும் கொல்லுவதற்காகவே தான் இந்த பயங்கர ரூபத்தை எடுத்திருக்கிறேன்" என்கிறான்.

"பீஷ்மர் த்ரோணர் போன்ற உன் சத்ருக்களை நான் கொல்ல மாட்டேன்" என்று நீ கூறினாலும், உன் சத்ருக்கள் அனைவரும் முடிவடைவது நிச்சயம் என்பதைக் உனக்கு அறிவிப்பதற்காகவே அந்த விஸ்வரூபம் உனக்கு என்னால் காட்டப்பட்டது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top