பகவத் கீதை

तस्मात्‍तवमुत्‍तिष्ट यशो लभस्व जित्‍वा शत्रुन्भुङ्क्ष्व राज्यं समृद्धम । मयैवैते निहताः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन् ॥ ३३ ॥
தஸ்மாத் த்வம் உத்திஷ்ட்ட யசோ லபஸ்வ ஜித்வா சத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம் |
மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமாத்ரம் பவர் ஸவ்யஸாசிந் ||     11.33

ஆகையினால், அர்ஜூன! நீ எழுந்து போர் செய்வாயாக. புகழைப் பெறுவாய். எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த அகண்ட ராஜ்யத்தை அனுபவிப்பாய்; இவர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டிருப்பதை நீ கண்டாயல்லவா! நீ காரண மாத்திரமாயிருந்து போர் செய்.

அர்ஜுன ! நீ என் அத்தையின் மகன். எனக்கு மிகவும் பிரியமானவன். ஆதலால் நீ புகழையும் அரசையும் பெற வேண்டும் என்கிற விருப்பத்தினால், நான் ஏற்கனவே அந்த கெட்ட புத்தியுள்ள துரியோதனாதிகளை கொல்ல நிச்சயித்து விட்டேன். பேருக்கு மாத்திரம் நீ போர் செய். நானே அவர்களை கொல்லப் போகிறேன் அதை நீ நேரில் என் விச்வரூபத்தில் கண்டாயல்லவா?

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top