பகவத் கீதை

सञ्जय उवाच
एतत् श्रुत्‍वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी ।
नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीतभीतः प्रणम्य ॥ ३५॥
ஸஞ்சய உவாச – ஸஞ்சயன் கூறினான்!
ஏதத் ச்ருத்வா வசநம் கேசவஸ்ய க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரிடீ |
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய ||     11.35

கேசவனுடைய இம்மொழியைக் கேட்டு க்ரீடம் தரித்த அர்ஜுனன் நடுங்கி கைகளைக் கூப்பி, நமஸ்கரித்து வணங்கி மீண்டும் தழுதழுத்த குரலுடன் பேசலானான்.

கிரீடம் தரித்த அரசன் எவருக்கும் வணங்க மாட்டான்; எவர்களைக் கண்டும் அஞ்சமாட்டான்; அப்படியிருக்க அர்ஜுனன் க்ருஷ்ணனுக்குத் தலைவணங்கி, கைகூப்பி தெண்டனிட்டு நாக்குழற பேசினான். இதனால் பகவான் முன்னிலையில் எவ்வளவு உயர்ந்தவனாகயிருந்தாலும், உடல் குறுகி, மனம் உருகி, கைகளைக் கூப்பி தெண்டனிட வேண்டும் என்பது வெளியாகிறது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top