பகவத் கீதை
भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन ।
ज्ञातुं द्रष्टुं च तत्तवेन प्रवेष्टुं च परंतप ॥ ५४ ॥
ज्ञातुं द्रष्टुं च तत्तवेन प्रवेष्टुं च परंतप ॥ ५४ ॥
பக்த்யா த்வநந்யயா சக்ய அஹமேவம்விதோர்ஜுந |
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப || 11.54
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப || 11.54
அர்ஜுன! நீ என்னை எவ்வாறு கண்டாயோ அது போல, வேதம் ஓதுவதினாலும், தவத்தினாலும், யாகாதிகளினாலும், தானத்தினாலும், நான் காணக்கூடியவனல்லன். ஆனால் என்னிடம் செய்யும் அனன்ய பக்தியினால் மாத்திரமே, நான் உள்ளபடி அறிவதற்கும் காண்பதற்கும், அடைவதற்கும் தகுதியானவன்.
பகவானைப் பற்றி அறிவதற்கோ, அவனைக் காண்பதற்கோ, அவனை அடைவதற்கோ மற்றவைகளில் பற்று அற்று, அவன் ஒருவனிடமே செய்யும் பக்தியே (அன்பே) ஸாதனம். வேறு ஒன்றும் ஸாதனமாகாது என்று பக்தியின் மேன்மையை இந்த சுலோகத்தில் கூறுகிறான் கண்ணன்.

