ஆத்மாவைத் தவிர மற்ற எதையும் விரும்பாதவனாய், பரிசுத்தனாய், வல்லமை உள்ளவனாய், மற்றவைகளில் உதாஸீனனாய், சுக துக்கங்கள் அற்றவனாய், மற்ற காமிய கர்மங்களைத் துறந்தவனாய், என்னிடம் பக்தி செய்கிறவன் எனக்கு இனியன்.
இந்த கர்மயோகி ஆத்மாவைக் காண்பதிலேயே விருப்பமுடை யவனாயிருப்பான். மற்றவை எதையும் இச்சியான். சாஸ்திரம் சொல்லியபடியே செய்வான்; மற்றவைகளில் உதாஸீனனாய் இருப்பான். தனக்குரிய கர்மாநுஷ்டானத்தைச் செய்வதினால் உண்டாகும் சுகதுக்கம், குளிர்ச்சி வெப்பம் போன்றவைகளைப் பொருட்படுத்த மாட்டான். இப்படிப்பட்ட என் பக்தன் எனக்கு இனியனாவான்.