துல்யநிந்தாஸ் துதிர் மெள நீ ஸந்துஷ்டோ யநகேநசித் | அங்கேத: ஸ்த்திரமதி: பக்திமாந் மே ப்ரியோ நர: || 12.19
பகையையும் நட்பையும் அதேபோல தனக்கு நேரும் அவமானத்தையும் ஒன்று போல் கருதுபவன்; குளிர் வெப்பம், இன்ப துன்பங்களில் களிப்பும் கவர்வும் அற்று இருப்பவன். இகழ்ச்சி புகழ்ச்சி இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன். அதிகமாகப் பேசாதவன். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவன். வீடு முதலிய தான் இருக்கும் இடங்களில் அபிமானமில்லாதவன். உறுதியான உள்ளமுடையவன்; இப்படிப்பட்ட என் பக்தன் எனக்குப் பிரியன்.