பகவத் கீதை

मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥ ८ ॥

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய |
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்த்வம் ந ஸம்சய: ||        12.8

ஆதலால் அர்ஜூன! நீ என்னிடத்திலேயே உன் மனத்தை வைத்திரு; உன் புத்தியையும் என்னிடமே செலுத்து. நீ என்னிடமே வசிப்பாய் என்பதில் சந்தேகமேயில்லை. (அதாவது நீ என்னை அடைவாய். மறுபிறவி இல்லாத மோக்ஷம் அடைவாய் என்பது பொருள்).

பகவானிடம் அன்பைச் செய்வது சுலபமாயும் இனிமையாகவு மிருக்கும். சீக்கிரத்தில் உயர்ந்த பலனான பகவானை அடைவிக்கும். ஆதலால் அர்ஜுன ! நீ உன் மனத்தை என்னிடம் செலுத்தி, உன் புத்தியைக் கொண்டு என்னை அடைவதே மேலான பலன் என்பதை நிச்சயித்திருந்தாயாகில், நீ என்னிடமே வஸித்திருப்பாய். அதாவது மறுபிறவியில்லா மோக்ஷம் அடைவாய்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top