பகவத் கீதை

श्रीभगवानुवाच:
इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥ १३.२ ॥

ஸ்ரீ பகவான் உவாச:

இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே I
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத் வித: ||        13.2

கண்ணன் கூறியது:

குந்தி புத்திரனே! இந்த உடல் க்ஷேத்ரம் எனப்படும். இதை அறியும் ஜீவாத்மா க்ஷேத்ரஜ்ஞன் எனப்படுபவன். சிறந்த அறிவுடைய ஜ்ஞானிகள் இப்படி கூறுவர்.

பல அவயவங்களுடன் கண்களால் காணப்படும் இந்த உடல் க்ஷேத்ரம் எனப்படும். இந்த உடலினுள் இருக்கும் ஜீவன், இவ்வுடலை அறிந்து அதை தரிக்கிறான். இவன் க்ஷேத்திரஞ்ஜன் எனப்படுவான். அறிவுடையோர் இவ்வாறு பகர்வர். உடல் வேறு உயிர் வேறு என்பதைக் கூறுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top