இனி ஜீவாத்மாவின் தரிசனம் பெற உபாயங்களை, இரண்டு சுலோகங்களினால் சொல்லுகிறான்.
சிலர் உடலில் உள்ள ஆத்மாவை, மனத்தின் யோகத்தினால் காண்கிறார்கள். இதற்குத் தகுதியற்றவர், ஜ்ஞான யோகத்தினால் ஜீவனைக் காண்கின்றனர். இப்படி ஜ்ஞானயோகம் செய்யவும் தகுதியற்றவர், ஜ்ஞானத்தை உட்கொண்ட கர்மயோகத்தினாலேயே ஜீவாத்ம தரிசனம் பெறுகின்றனர்.