எவன் இந்த ஜீவனையும் ப்ரக்ருதியான உடலையும் ஸத்வம் முதலிய குணங்களோடு கூட அறிகிறானோ, அவன் எவ்விதமாக இருந்தபோதிலும் மறு பிறவி அடைகிறதில்லை.
யாராயிருந்தாலும், பிராஹ்மண, க்ஷத்திரிய, வைச்ய, சூத்ர, எந்த ஜாதியில் பிறந்தவனாயினும், ஒருவன் தன் வாழ்நாளில் எப்படியிருந்த போதிலும், தன் உடல், ஜீவாத்மா இவைகளின் உண்மைகளை கண்ணன் கீழே கூறியபடி அறிகிறானோ அவன் மறு பிறவியில்லாத மோக்ஷம் பெறுகிறான். இதனால் மோக்ஷம் பெற பகவத் ஜ்ஞானம் எப்படி அவசியமோ, அதுபோல ப்ரக்ருதி, ஜீவன் அவைகளின் உண்மையான தன்மையையும் அறிய வேண்டும் என்பது தேறுகிறது.