பகவத் கீதை

ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना |
अन्ये सांङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे ॥ १३.२५ ॥

த்யாநேந ஆத்மநி பச்யந்தி கேசித் ஆத்மாநம் ஆத்மநா |
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே ||        13.25

இனி ஜீவாத்மாவின் தரிசனம் பெற உபாயங்களை, இரண்டு சுலோகங்களினால் சொல்லுகிறான்.

சிலர் உடலில் உள்ள ஆத்மாவை, மனத்தின் யோகத்தினால் காண்கிறார்கள். இதற்குத் தகுதியற்றவர், ஜ்ஞான யோகத்தினால் ஜீவனைக் காண்கின்றனர். இப்படி ஜ்ஞானயோகம் செய்யவும் தகுதியற்றவர், ஜ்ஞானத்தை உட்கொண்ட கர்மயோகத்தினாலேயே ஜீவாத்ம தரிசனம் பெறுகின்றனர்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top