உடல் அதன் புலன்களையெல்லாம் தரித்து ஏவிக் கொண்டு அவைகளுக்கு ஈச்வரனாயிருக்கும், ஜீவாத்மாக்களை எல்லாம் ஒத்தவை (சமம்) என்று எவன் காண்கிறானோ, அவன் தனக்குத் தானே ஒருவித விநாஸத்தையும் செய்து கொண்டவனாக மாட் டான். இவன் தன்னை ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடுவித்து மேலான, கதியை அடைகிறான்; அதாவது பரிசுத்த ஜீவாத்ம தரிசனம் பெறுகிறான்.
இப்படி ஜீவாத்மாக்களின் ஸாம்யத்தைக் கூறி, மேலே உடலைக் காட்டிலும் வேறுபட்டவன் ஜீவன் என்பதைச் சொல்லுகிறான்.