பகவத் கீதை

बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥ १३.१६ ॥

பஹிர் அந்தச்ச பூதானாம் அசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத் தத் அவிஞ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகேச தத் ||        13.16

பஞ்ச பூதங்களின் உள்ளுமிருப்பவன், புறமுமிருப்பவன். சலனமில்லாதவன் (அசைதல்) சலனமுள்ளவன், அணுஸ்வரூபன். ஆதலால் அறிய முடியாதவன்; தூரத்திலிருப்பவன், சமீபத்திலும் இருப்பவன். இப்படி ஒன்றுக்கொன்று விரோதம் தோற்ற ஜீவனின் தன்மையைக் கூறுகிறான்.

பத்த தசையில் பஞ்ச பூதங்களான சரீரத்தின் இருதயத்திலிருக்கிறான். அதிலிருந்து கர்ம பலங்களை அனுபவித்துத் தீர்ந்ததும் வெளியேறுகிறான்.

உடலின் ஹிருதயத்தில் சலனமில்லாமல் ஓர் அசைவுமின்றி இருப்பவன் ஜீவாத்மா; ஆனால் உடலின் அசைதலை நாம் ஜீவனுக்கு விவரிக்கிறோம். அணுஸ்வரூபன் ஜீவன், அதாவது அணு மிக நுண்ணியது. ஆகையால் புலன்களால் அறிய முடியாதவன்; ஆனால் ஜ்ஞானயோகத்தினால் காணத்தக்கவன்; ஜ்ஞானிகளின் சமீபத்திலிருப்பவன். சரீரமே ஆத்மா என்று இருக்கும் சம்சாரிகளுக்கு அப்பாற்பட்டவன் ஜீவாத்மா.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top