பகவத் கீதை

பதினான்காம் அத்தியாயம்- குணத்ரய விபாகயோகம்

॥ चतुर्दशोऽध्यायः ॥
श्रीभगवानुवाच –
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् । यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥ १४.१ ॥
பகவான் உவாச –
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்நானாநாம் ஜ்நானம் உத்தமம் |
யத் ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திம் இதோ கதா: ||     14.1

பதினான்காம் அத்தியாயம், அவதாரிகை

உடல், உயிர் (ஜீவன்) இவைகளின் தன்மையும், ஆத்ம தரிசனம் பெறுவதற்கான அமானித்வம் முதலான குணங்கள் ஸம்ஸார பந்த காரணம்; அதிலிருந்து ஜீவன் விடுபட்டு பரிசுத்த ஆத்மாவை அடையும் உபாயம் ஆகியவற்றை பதிமூன்றாம் அத்யாயத்தில் கண்ணன் விவரித்தான்.

இனி பதிநான்காம் அத்யாயத்தில், உடலுக்கு உண்டான ஸத்வ ரஜஸ் தமஸ் குணங்களடியாகச் செய்யப்படும், கருமாக்களின் பலனை அனுபவிக்க, ஜீவன் பல பிறவிகள் எடுக்கிறான் என்பதை யும், இப்படி ஜந்ம பரம்பரை ஏற்படுவதைத் தவிர்த்து, மோக்ஷம் பெறும் உபாயத்தையும் கூறுகிறான்.

மோக்ஷம் பெறுவதற்குத் தடையான முதல் விரோதி நம் உடல். அதைப் பற்றிய அறிவு நமக்கு வேண்டும். வியாதியை அறிந்தால் தான், தக்க மருந்து கொடுக்க முடியும். சரீரமே ஒரு வியாதி, பகவானை அடையவிடாமல் நம்மை இது தடுக்கிறது. இதை அறிய வேண்டி, உடலைப் பற்றி, விரிவாக கீழ் அத்யாயத்தில் சொல்லப்பட்டது. அதைப் போக்கும் வழியை இந்த அத்தியாயத்தில் கண்ணன் கூறுகிறான்.

ஸ்லோகத்தின் பொருள்:

கண்ணன் கூறியது:

இது வரையில் சொன்ன, ஜ்ஞானத்தை விட மேலான அறிவை நான் உனக்கு சொல்லப்போகிறேன். இந்த சிறந்த ஞானத்தைக் கொண்டு ரிஷிகள் எல்லோரும் உயர்ந்த கதியை அடைகின்றனர். (உத்தமம் உயர்ந்தது, பரம் -மேலானது).

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top