பகவத் கீதை

इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥ १४.२ ॥
இதம் ஜ்ஞானம் உபாச்ரித்ய மம ஸாதர்ம்யம் ஆகதா: |
ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யதந்திச ||     14.2

இந்த ஜ்ஞானத்தினால் எனக்கு சமமான நிலையைப் பெறுகிறார்கள். இவர்கள் சிருஷ்டியில் பிறவியும், ப்ரளயத்தில் அழிவும் அடைவதில்லை.

இந்த ஜ்ஞானத்தைப் பெற்றால் பக்திக்குத் தடையான பாபம் போகும்; என்னை பக்தியுடன் த்யானம் செய்து, மோக்ஷம் பெறலாம். பரமபதத்தை அடைந்த முக்த ஜீவன் பகவானான என்னுடன் பலவகையிலும் ஸாம்யம் பெறுகிறான் என்கிறான்.

மம ஸாதர்ம்யம் ஆகதா: – என்பதினால் பகவானுடன் ஸாம்யம் பெறுகிறார்கள் என்பதே பொருளன்றி, பகவானாகவே ஆகிவிடுகிறான் என்பது பொருளல்ல; இரண்டு பொருள்களுக்கிடையேதான் ஸாம்யம் (அது இதற்கு சமம்) என்று சொல்ல முடியும். ஆதலால் முக்தி தசையிலும் ஜீவன் தனிப்பட்ட தத்வமே என்பது தேறுகிறது.

இங்கு ஆகதா: என்று பன்மையில் கூறியிருப்பதனால், மோக்ஷ தசையிலும் ஜீவாத்மாக்கள் பல, ஒன்றல்ல என்பது விளங்குகிறது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top