பகவத் கீதை

अधश्‍चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।
अधश्च मूलान्यनुसंततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥ १५.२ ॥

அதச் சோர்த்வஞ்ச ப்ரஸ்ருதாஸ் தஸ்ய சாகா குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாளா: |

அதச்ச மூலாந் யநுஸந்ததாநி கர்மானு பந்தீநி மனுஷ்யலோகே ||        15.2

அந்த மரத்தின் கிளைகள் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களால் செழிப்புற்று, அந்த குணங்களால் உண்டாகும் விஷயங்களால் தளிர்விட்டு, கீழும் மேலும் படர்கின்றன.

வினைப்பயனால் ராகத்வேஷமான வேர்கள் கீழே பூமியில் படர் கின்றன.

தேவ மனித பசு பறவைகளான மரத்தின் கிளைகள் அவரவர் கர்மானுகுணமாக சில மேல் நோக்கியும் பிரிந்து போகின்றன. குணங்களால் உண்டாகும் விஷயானுபவம் அக்கிளைகளில் உண்டாகும் தளிர்கள்.

ப்ரஹ்ம லோகத்தில் ஆணிவேர் உடையதாகவும், தேவ மனித லோகங்களில் சல்லிவேர் உடையதாகவும் இந்த மரம் இருக்கிறது. அவைகள் செய்யும் கர்மங்களினால் வேர் ஊன்றி ஸம்ஸாரத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top