பகவத் கீதை

பதினெட்டாம் அத்யாயம்-மோக்ஷஸந்யாஸயோகம்

|| अष्टादशोऽध्यायः ॥

अर्जुन उवाच –
संन्यासस्य महाभाहो तत्तवमिच्छामि वेदितुम् ।
त्यागस्य च हृषीकेश पृथक्के शिनिषूदन ॥ १८.१ 18.1 ॥

அர்ஜூன உவாச –
ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்வமிச்சாமி வேதிதும் |
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேச ப்ருதக் கேசிநிஷூதந ||     18.1

பதினெட்டாம் அத்யாயம், அவதாரிகை:-

இதுவே கீதா உபதேசத்தின் இறுதி அத்யாயம். இத்துடன் தன் கீதை உபதேசத்தை இனிது முடித்துக் கொள்கிறான் கண்ணன்.

கீழ் அத்யாயத்தில் தேவ, அசுர, ராக்ஷஸச் செயல்களை ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு ஏற்ப மூன்றுவிதமாகப் பிரித்துச் சொன்னான். ஸத்வ குணமுள்ள தேவச்செயல்களை சிரத்தையுடன் செய்து ஆத்ம நன்மையைப் பெறலாம் என்று சொல்லி, முன் அத்தியாயத்தை முடித்திருக்கிறான்.

இனி இந்தக் கடைசி அத்யாயத்தில் முதன் முதலில் தியாகம் என்றாலும் ஸந்யாஸம் என்றாலும் ஒன்றே என்பதைச் சொல்லி, அவைகளின் தன்மைகளை விவரிக்கிறான். பிறகு, தியாகம், கர்மா, கர்த்தா, ஜ்ஞானம், த்ருதி, பயன் இவை ஒவ்வொன்றையும் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கேற்ப பிரித்துச் சொல்லுகிறான். பிறகு மனிதரின் வர்ணத்தை நான்கு வகையில் பிரித்து, அவரவர்களின் வர்ணத்திற்குரிய தர்மத்தை ஸாத்விக த்யாகத்துடன் செய்து ஆத்ம நன்மை பெறலாம் என்பதையும் கூறியுள்ளான். இந்த அத்யாயம் இறுதியில் பக்தியே மோக்ஷ ஸாதனம் என்பதை உறுதிப் படுத்தி, அதற்குத் அதற்குத் தடையான பாபத்தைத்தானே போக்கித் தருகிறேன் என்று சொல்லி, தன் உபதேசத்தை முடித்துக் கொள்கிறான் கண்ணன்.

ஸ்லோகத்தின் பொருள்:-

அர்ஜுனன் கூறியது:-

க்ருஷ்ண! ஸந்யாஸத்தின் தன்மையையும் த்யாகத்தின் உண்மையையும் நான் அறிய விரும்புகிறேன்; அதை நீ எனக்கு விரிவாகச் சொல்வாயாக.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top