பகவத் கீதை

श्रीभगवानुवाच –
काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥ १८.२ ॥

ஸ்ரீ பகவான் உவாச |
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது: |
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா: ||     18.2

கருமங்களைச் செய்வதை விட்டு விடுவதே ஸந்யாஸம் என்கிறார்கள் சில ஜ்ஞானிகள்; கர்மா எதையும் விடக்கூடாது; செய்தேயாக வேண்டும். அவைகளின் பயனை விடுவதே த்யாகம் என்கிறார்கள் மற்றும் சில பண்டிதர்கள். கருமங்களைச் செய்வதினால் சில பிழைகள் நேரிடுகின்றன. ஆதலால் அவைகளை விட வேண்டும் என்கிறார்கள் முந்தினவர்; சாஸ்த்திரம் விதித்திருப்பதினால் எந்தக் கர்மாவையும் விடக்கூடாது என்கிறார்கள் மற்றவர்கள். இவற்றின் உண்மையை நான் உனக்குச் சொல்லுகிறேன் கேள் என்கிறான் கண்ணன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top