பகவத் கீதை வெண்பா பாரா ரியனேயிப் பாண்டவர்கள் சேனையினைத்தாராரும் பாஞ்சாலன் றந்தமகன்-சீரார்மதியுடைமை நீகொடுத்த வண்மையினாற் காக்கும்விதியுடைமை பூண்ட வியப்பு. 1.3 ஆரியனே! ஆசாரியனே! தார் ஆரும் பாஞ்சாலன் தந்த மகன் மாலை அணிந்த பாஞ்சால தேசத்தரசனுடைய குமாரனான திருஷ்டத்யும்னன் சீர் ஆர் மதி உடைமை நீ கொடுத்த வண்மையினால் நல்ல புத்தியுடைமையை நீர் கொடுத்த அந்த ஔதார்யகுணமே ஹேதுவாக இப்பாண்டவர்கள் சேனையினை இந்தப் பாண்டவர்களுடைய சேனையை காக்கும் விதியுடைமை பூண்ட வியப்பு காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் ஆச்சரியமான செயலை பார் காண்பீராக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0