பகவத் கீதை வெண்பா

தன்மநில மாகுங் குருநிலத்துத் தாஞ்சேர்ந்து
வன்மையம ரிச்சித்தென் மைந்தருந்தந்-தன்மையுறப்
பஞ்சவரு மென்செய்தா ரென்றந்தன் பண்புரைப்பச்
சஞ்சயனுஞ் சொன்னான் சமைந்து.   1.1

தன்ம நிலம் ஆகும் குருநிலத்து

தர்மபூமியான குருக்ஷேத்திரத்திலே

தாம் சேர்ந்து

அனைவரும் ஒன்றுசேர்ந்து

தம் தன்மை உற

தம் க்ஷத்திரியதர்மம் பொருந்துவதற்காக

வன்மை அமர் இச்சித்து

கடுமையான போரை விரும்பி

என் மைந்தரும்

என் மக்களான துரியோதனாதியரும்

பஞ்சவரும்

என்ன செய்தார்கள்

என்று

என்று

அந்தன்

உள்ளும்புறமும் குருடனான

குரு

திருதராஷ்டிரன்

பண்பு உரைப்ப

தன் தன்மைக்குத்தக்க வார்த்தையைச் சொல்ல

சஞ்சயனும்

ஸஞ்ஜயனும்

சமைந்து சொன்னான்

ஒருப்பட்டுச் சொன்னன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top