பகவத் கீதை வெண்பா என்றுமறை நூன்முனிவ ரெல்லா மிசைக்கின்றார் நன்றியமர் நாரதன்றா னல்லசித – னன்றிபுனை தேவலனுஞ் சீரார் வியாதனுமுன் றேர்ந்தெனக்குக் கோவலநீ யும்பணித்தாய் கூர்ந்து. 10.14 பரமாம் பிரமம் பரப்ரஹ்ம்மமாகவும் பரமாகும் தாமம் பரஞ்சோதியாகவும் பரமாம் பவித்திரம் பரம பாவனமாகவும் நீதானாய் நீயேயாய் திரமான என்றுமுள்ள வான் பிறங்கு பரமபதத்தில் விளங்காநிற்கும் பூருடனாய் புருஷனாய் மன்னு முதல் தேவனாய் நிலையான ஆதி தேவனாய் தான் பிறவாதான் தான் (கர்மத்தால்) பிறவாதவனாய் விபுவும் தான் தானே ஸர்வவ்யாபியாகவும் இருக்கிறாய் என்று என்று (முறையே) மறைநூல் வேதஶாஸ்த்ரமும் முனிவரெல்லாம் முனிவரனைவரும் இசைக்கின்றார் கூறுகின்றார்கள் நன்றி அமர் நாரதன் தான் தேவரிஷியாகிற நன்மையையுடைய நாரத பகவானும் நல் அசிதன் நன்மைமிக்க அஸிதரும் நன்றி புனை தேவலனும் நன்மையுடைய தேவலனும் சீரார் வியாதனும் சிறப்புமிக்க வியாஸரும் முன் இசைக்கின்றார் முன்னமே கூறியிருக்கின்றார்கள் கோவல! ஆயனே! தேர்ந்து ஆராய்ந்து கூர்ந்து குறிக்கொண்டு நீயும் நீயும் எனக்குப் பணித்தாய் எனக்கு உரைத்தாய். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0