பகவத் கீதை வெண்பா என்னை நீ நோக்கி யியம்பியருள் கின்றனமை தன்னை நான் மெய்யாத் தகவறிவன் – முன்னையாம் வானவர்க டானவர்கண் மாயவனே! நின்றோற்றந் தானறியா ரெப்படியுந் தான். 10.15 நீ என்னை நோக்கி நீ என்னைக் குறித்து இயம்பியருள்கின்றனமை தன்னை சொல்லும் உனது பெருமைகளை நான் மெயயா தகவு அறிவன் நான் மெய்யான பெருமைகளே என அறிவேன் மாயவனே! ஆச்சரியமான ஞானம் சக்தி முதலானவற்றை உடையவனே! முன்னையாம் ஆதிகாலத்திலிருந்து வாழும் வானவர்கள் தேவர்களும் தானவர்கள் அஸுர ராக்ஷஸர்களும் எப்படியுந்தான் எந்த வகையிலும் நின் தோற்றம்தான் அறியார் உன்னைப்பற்றிச் சொல்லவும் அறியார்கள். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0