பகவத் கீதை வெண்பா பூதங்கட் காதியாய்ப் பூதங்க ணாயகனாய் மீதேவ தேவனாய் மிக்குலகி – னாதா புருடோத்த மாவுன்னை நீயேநின் புத்தி தெருடோற்ற லுற்றிருத்தி தீர்ந்து. 10.16 பூதங்கட்கு எல்லாப் பொருள்களுக்கும் ஆதியாய் காரணனாய் பூதங்கள் நாயகனாய் எல்லாப் பொருள்களையும் நியமிப்பவனாய் மீதேவ தேவனாய் பெரிய தேவர்களுக்கும் தேவனாய் மிக்கு சிறப்புற்று உலகின் நாதா உலகத்துக்கு ஸ்வாமியாயிருப்பவனே! புருடோத்தமா! புருஷோத்தமனே! உன்னை உன்னை நீயே தீர்ந்து நின் புத்தி தெருள் தோற்றல் உற்றிருத்தி நீயே உனது தெளிந்த அறிவாலேயே பரிபூரணமாக அறிகிறாய். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0